/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.14.7 கோடியில் பிச்சாவரம் மேம்படுத்தும் பணி... மந்தம்; ஓராண்டாக வாகன நிறுத்தம் மட்டுமே 'ரெடி'
/
ரூ.14.7 கோடியில் பிச்சாவரம் மேம்படுத்தும் பணி... மந்தம்; ஓராண்டாக வாகன நிறுத்தம் மட்டுமே 'ரெடி'
ரூ.14.7 கோடியில் பிச்சாவரம் மேம்படுத்தும் பணி... மந்தம்; ஓராண்டாக வாகன நிறுத்தம் மட்டுமே 'ரெடி'
ரூ.14.7 கோடியில் பிச்சாவரம் மேம்படுத்தும் பணி... மந்தம்; ஓராண்டாக வாகன நிறுத்தம் மட்டுமே 'ரெடி'
ADDED : ஏப் 10, 2024 01:55 AM

கிள்ளை : பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், ரூ. 14.7 கோடி மதிப்பில், மேம்படுத்தும் பணிகள் மந்தமாக நடந்துவருகிறது. ஒராண்டில் கார் பார்க்கிங் பணிகள் மட்டுமே முடிந்துள்ளது.
சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்திதல் வன சுற்றுலா மையம் உள்ளது. சதுப்பு நிலக்காடுகள் நிறைந்த இயற்கை சூழலுடன், மருத்துவ குணம் கொண்ட சுரபுண்ணை என்னும் மாங்குரோவ்ஸ் தாவரங்கள் நிறைந்திருப்பதால், உலக அளவில் இந்த சுற்றுலா மையம் சிறப்பு பெற்றுள்ளது. இங்கு உள்ளூர் மற்றும் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து, தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து, படகு சவாரி செய்கின்றனர்.
பிச்சாவரத்தில், கடந்த 1984ம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் படகு குழாம் துவக்கப்பட்டது. தற்போது, படகு குழாமில் 15 மோட்டார் படகுகள், 35 துடுப்பு படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா மையத்திற்கு, ஆண்டுக்கு 3 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் வரை சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறன்றனர்.
இந்நிலையில், சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், சுற்றுலா மையத்தை மேம்படுத்தும் திட்டம் துவங்கப்பட்டது. அதற்காக, ரூ. 14 கோடியே 7 லட்சம் மதிப்பில், பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற உள்ளது.
குறிப்பாக, உணவகம், குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை, பார்வையாளர்கள் கூடம், குழந்தைகள் விளையாட்டு கூடம், வாகன நிறுத்துமிடம் உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இப்பணியை, கடந்த ஏப்ரல் மாதம் வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், துவக்கி வைத்தார்.
தற்போது, சுற்றுலா மைய வளாகத்தில், கார் பார்க்கிங் வசதிகள் மட்டுமே நடந்துள்ளது. மற்ற பணிகள் இன்னும் துவக்கப்படாமல் உள்ளது. தற்போது, கடந்த ஒரு மாதமாக எந்த பணியும் நடைபெறாமல் உள்ளது.
பிச்சாவரம் சுற்றுலா மையம், உலகளவில சிறப்பு வாய்ந்ததாக உள்ளதால், சுற்றுலா மையத்தை மேம்படுத்த அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இருந்தும், மேம்படுத்தும் பணிகள் மந்தமாக நடப்பதால், அங்கு வரும் சுற்றுலா பயணிகள் முகம் சுளித்து வருகின்றனர். எனவே, மேம்படுத்தும் பணியை விரைந்து முடிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

