ADDED : டிச 21, 2024 05:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு தொகுதி காட்டேரிக்குப்பம், ராஜாங்குளம் பழங்குடியினர் பகுதியில் நல்லாட்சி வாரத்தை முன்னிட்டு, பழங்குடியினருக்கான நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், நடந்த முகாமிற்கு, துறை இயக்குனர் இளங்கோவன் தலைமை தாங்கி, துறையின் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள், அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார். துறையின் நலத்திட்டங்கள் சார்ந்த விண்ணப்பங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
கண்காணிப்பாளர் வேல்முருகன், ஆய்வாளர் ராஜா, துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

