/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வங்கியாளர்கள் குழுமம் சார்பில் திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு
/
வங்கியாளர்கள் குழுமம் சார்பில் திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு
வங்கியாளர்கள் குழுமம் சார்பில் திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு
வங்கியாளர்கள் குழுமம் சார்பில் திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு
ADDED : செப் 12, 2025 03:49 AM

புதுச்சேரி: மாநில அளவிலான வங்கியாளர் குழுமம் சார்பில் நடந்த முகாமில், பிரதமரின் பல்வேறு திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்திய அரசு நிதி சேவைகள் துறை சார்பில், ஊரக நிலைகளில் நிதி உள்ளடக்கத்தை வலுப்படுத்தும் வகையில், மூன்று மாத நிதி உள்ளடக்கம் முழுமை அடைவதற்கான பிரசாரம் நடைமுறைப்படுத்த பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, மாநில அளவிலான வங்கியாளர் குழுமம் சார்பில்,புதுச்சேரி நகராட்சி மற்றும் கூடப்பாக்கம் கிராம பஞ்சாயத்திலும், கடந்த 8 மற்றும் 9ம் தேதி ஆகிய இரு நாட்கள் முகாம் நடந்தது.
நிகழ்ச்சியில், நிதி சேவைகள் துறை சார்பில்,இணைச் செயலாளர் சைலேந்திர குமார், ஒருங்கிணைப்பாளர் வெங்கட சுப்ரமணியன், மாநில அளவிலான வங்கியாளர் குழுமம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதில், பிரதமரின் ஜன் தன் யோஜனா,ஜீவன் ஜோதி பீமா யோஜனா, சுரக் ஷா பீமா யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா போன்ற திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.