/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தடகள போட்டி துவக்க விழா

 தடகள போட்டி துவக்க விழா

 தடகள போட்டி துவக்க விழா

 தடகள போட்டி துவக்க விழா

 தடகள போட்டி துவக்க விழா

ADDED : நவ 15, 2025 05:24 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: வட்டம் 2 சார்பில், தடகள போட்டி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நேற்று நடந்தது.

சிறப்பு விருந்தினர்களாக, பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி, துணை இயக்குநர் வைத்தியநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர். உடற்கல்வி விரிவுரையாளர் ரவிக்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போட்டியில், வட்டம் 2ல் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 1,200 மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது .

நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் உஷா, உடற்கல்வி ஆசிரியர்கள் நாராயணன், ஆதிகேசவன், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.