/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லாஸ்பேட்டைஹெலிபேடு மைதானத்தில் 'வாக்கிங் டிராக்': 855 மீட்டருக்கு பிரம்மாண்டமாக அமைகிறது
/
லாஸ்பேட்டைஹெலிபேடு மைதானத்தில் 'வாக்கிங் டிராக்': 855 மீட்டருக்கு பிரம்மாண்டமாக அமைகிறது
லாஸ்பேட்டைஹெலிபேடு மைதானத்தில் 'வாக்கிங் டிராக்': 855 மீட்டருக்கு பிரம்மாண்டமாக அமைகிறது
லாஸ்பேட்டைஹெலிபேடு மைதானத்தில் 'வாக்கிங் டிராக்': 855 மீட்டருக்கு பிரம்மாண்டமாக அமைகிறது
UPDATED : டிச 13, 2025 08:01 AM
ADDED : டிச 13, 2025 05:07 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் 855 மீட்டர் தொலைவிற்கு வாக்கிங் டிராக் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. லாஸ்பேட்டைஹெலிபேடு மைதானத்தில் தினமும், காலையிலும், மாலையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வாக்கிங் செல்கின்றனர். இதேபோல், நுாற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களும் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால்,ஹெலிபேடு மைதானம் வெளிச்சம் இல்லாமல் இருளில் மூழ்கி, பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. அதையடுத்துஹெலிபேடு மைதானத்தில், ஐந்து இடங்களில் பொதுப்பணித் துறை சார்பில்,ஹைமாஸ் விளக்குகள் போடப்பட்டன.ஹைமாஸ் விளக்குகளுக்கு மின் இணைப்பு கொடுத்து ஜொலிக்கின்றன. பொதுமக்கள் நிம்மதியாக வாங்கிங் செல்கின்றனர்.
இருள் சாபம் நீங்கியஹெலிபேடு மைதானத்தினை தற்போது மேம்படுத்தும் புதிய திட்டங்கள் துவங்கப்பட உள்ளது. இப்பணிகளை பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்த கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., கூறியதாவது:
எனது காலாப்பட்டு தொகுதியில் உள்ள ெஹலிபேடு மைதானத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாக்கிங் செல்கின்றனர். ஆனால் போதிய வெளிச்சம் இல்லாமல் இருண்டு போய்விடுவதால் பாதுகாப்பில்லாமல் இருந்தது. அதையடுத்து, ஐந்து இடங்களில்ஹைமாஸ் விளக்குகள் தலா 5 லட்சம் வீதம் 20 லட்சம் ரூபாய் செலவில் போட்டு, மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்துஹெலிபேடு மைதானத்தினை சுற்றிலும் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களின் வசதிக்காக 100 இடங்களில் தெருவிளக்குகள் 16 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக இதுவரை 54 இடங்களில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஏர்போர்ட் நுழைவு வாயில் முதல் என்.சி.சி., வளாகம் வரையில் உள்ள 17 தெரு விளக்குகளுக்கு முழுமையாக இணைப்பு கொடுத்து ஜொலிக்கின்றன. அடுத்து ஹெலிபேடு மைதானத்தின் நீதிபதிகள் குடியிருப்பு அமைந்துள்ள தெற்கு பக்கத்தில் 30 தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் ஒரு கம்பத்திற்கு இரண்டு லைட் வீதம் 60 தெரு விளக்குகள் உள்ளன. இந்த தெரு விளக்குகளுக்கு மற்ற மின் இணைப்புகளுடன் இணைத்து கொடுத்தால் லோடு தாங்க வாய்ப்பில்லை. எனவே தனி மின் இணைப்பு கொடுத்து ஒளிர விட மின் துறையை அணுகியுள்ளோம்.
இதேபோல் மோதிலால் நேரு பாலிக்டெக்னிக் முதல் தாகூர் கலைக்கல்லுாரி வரையில் 17 மின்கம்பங்கள் ஒருபக்க விளக்குகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி வெள்ளவாரி வாய்க்கால் ஏர்போர்ட் நுழைவு வாயில் முதல் லட்சுமி நகர் பாலமுருகர் கோவில் வரை 10 மின் கம்பங்கள் இருபக்க லைட்டுகளாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த 47 விளக்குகளுக்கு ஒரு வாரத்திற்குள் மின் இணைப்பு கொடுக்கப்படும்.
ஹெலிபேடு மைதானத்தின் நடை பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு தனியாக வாக்கிங் டிராக் 49.50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்க முடிவு செய்துள்ளோம். இந்த வாக்கிங் டிராக் 'தினமலர்' நாளிதழ் சார்பில், மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள இடத்தையொட்டி அமையும். இந்த வாக்கிங் டிராக், ஸ்கேட்டிங் மைதானத்தில் இருந்து துவங்கி தெற்கு பக்கம் 195 மீட்டர் நீளத்திற்கும், என்.சி.சி., மதில் சுவரையொட்டி கிழக்கு பகுதியில் 510 மீட்டர் நீளத்திற்கும், வடக்கு பகுதியில் 150 மீட்டர் என, மொத்தம் 855 மீட்டர் நீளத்திற்கு அமைகிறது. இந்த டிராக், 5 மீட்டர் அகலத்திற்கு அமையும். வாக்கிங் டிராகின் இருபக்கமும் 20 சிறிய தெரு விளக்குகள் அமைக்கப்படும்.
வாக்கிங் டிராக்கின் இருபுறமும் கெர்ப் வால் எனப்படும் தடுப்பும் அமைக்கப்படும். ஹெலிபேடு மைதானத்தில் மணல் கொட்ட முடிவு செய்துள்ளோம். இதற்கான பணிகள் விரைவில் துவங்கும்.
இதுமட்டுமின்றி வாக்கிங் செல்வோர் அமர்த்து செல்ல 30 இடங்களில் 16 லட்சம் ரூபாய் செலவில் பெஞ்ச் அமைக்கப்பட உள்ளது. இதற்கான டிசைன் தேர்வு நடந்து வருகிறது.
இந்த பெஞ்ச் வசதி வயதானவர்கள் சிரமம் இல்லாமல் நடை பயிற்சி மேற்கொள்ள உதவும்.
ஹெலிபேடு மைதானத்தில் மேம்பாட்டு பணிகள் அரசின் சொத்து மட்டும் அல்ல. அது மக்களின் சொத்து தான். எனவே சமூக பொறுப்புடன் பொதுமக்களும்ஹெலிபேடு மைதானத்தின் சொத்துகளை பாதுகாக்க வேண்டும்' என்றார்.
'ஹைமாஸ் டைமர்களை உடைத்தால்
போலீசில் புகார் அளிக்கப்படும்'
ஹெலிபேடு மைதானத்தில் உள்ளஹைமாஸ் விளக்குகளின் டைமர்களை மர்ம கும்பல் அடிக்கடி உடைத்து விடுகிறது. இதன் காரணமாக மைதானத்தில் ஒவ்வொரு பகுதியும் திடீரென இருளில் மூழ்கி விடுகின்றது. ைஹமாஸ் விளக்குகளின் டைமர்களை உடைக்கும் கும்பல் மீது போலீசில் புகார் அளித்து, அத்தொகையை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் கார்த்திக் கூறுகையில், ஹைமாஸ் விளக்கின் டைமர்கள் ஒவ்வொன்றும் 4,800 ரூபாய் மதிப்பு கொண்டது. இதுவரை மூன்று டைமர்களை மர்ம கும்பல் உடைத்து சேதப்படுத்தி உள்ளது. எனவே போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம். டைமர்களை உடைத்தால் மின் துறையின் சட்டப்படி நேரடியாகவே அதற்கான இழப்பீட்டை தர வேண்டி இருக்கும்' என்றார்.
வாகனங்கள் நுழையாத வகையில்
தடுப்பு ஏற்படுத்த உத்தரவு
ஹெலிபேடு மைதானத்தில் நுழைய, ஏர்போர்ட் நுழைவு வாயில் ஒரு வழியும், நீதிபதி குடியிருப்பு எதிரே இரண்டு வழிகளும் உள்ளன. இங்குள்ள பேரிகார்டுகளை நகர்த்திவிட்டு, வாகனங்கள் தடையை மீறி உள்ளே நுழைகின்றன. இது சம்பந்தமாக மைதானத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., விடம் முறையிட்டனர். இதனை கேட்ட கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.,ஹெலிபேடு மைதானத்தில் வாகனங்கள் உள்ளே நுழையாத வகையில் பைப்புகள் கொண்டு தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, பொதுப்பணித் துறை இளநிலை பொறியாளர் லோகநாதனுக்கு உத்தரவிட்டார்.

