/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உதவியாளர் தேர்வு ரிசல்ட் வெளியீடு 10,766 பேர் அடுத்த நிலைக்கு தேர்வு
/
உதவியாளர் தேர்வு ரிசல்ட் வெளியீடு 10,766 பேர் அடுத்த நிலைக்கு தேர்வு
உதவியாளர் தேர்வு ரிசல்ட் வெளியீடு 10,766 பேர் அடுத்த நிலைக்கு தேர்வு
உதவியாளர் தேர்வு ரிசல்ட் வெளியீடு 10,766 பேர் அடுத்த நிலைக்கு தேர்வு
ADDED : மே 01, 2025 04:44 AM
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் உதவியாளர் பணிக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் தேர்வு எழுதிய 22,860 பேரில் 10,766 பேர் இரண்டாம் நிலை தேர்வு எழுத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுச்சேரி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில், 256 உதவியாளர் பணிக்கு, 32 ஆயிரத்து 692 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த பணிக்கான முதல்நிலை தேர்வு, கடந்த 27 ம் தேதி நடந்தது. புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாகி ஆகிய 84 மையங்களில் நடந்தது. அதில் ஆண், பெண், என மொத்தம் 22 ஆயிரத்து 860 பேர் எழுதினர். இந்த தேர்வுக்கான ஆன்சர் கீ 28 ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வில் வெற்றிப் பெற்றவர்களின் பட்டியலை நிர்வாக சீர்திருத்த துறை நேற்று வெளியிட்டுள்ளது.தேர்வு எழுதிய 22,860 பேரில் 10,766 பேர் தேர்ச்சி பெற்று, இரண்டாம் நிலை தேர்வினை எழுத உள்ளனர்.
இந்த இரண்டாம் நிலை தேர்வு ஜூன் மாதம் 15ம் தேதி நடக்கும் என உத்தேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி மதிப்பெண் குறைப்பு: உதவியாளர் பணிக்கு அதிக பேர் எழுதி இருந்ததால் இரண்டாம் நிலை தேர்வு எழுவதற்கான கட் ஆப் தகுதி மதிப்பெண் அதிகரிக்கப்பட்டு இருந்தது. பொது பிரிவினர் 30 சதவீதம், எம்.பி.சி., ஓ.பி.சி., மீனவர், முஸ்லீம் இ.டபுள்யூ.எஸ்., பிரிவினருக்கு 25 சதவீதம், எஸ்.சி., எஸ்.டி., பி.டி. , மாற்றுதிறனாளிகளுக்கு 20 சதவீத குறைந்தபட்சம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், ஆட்சேபனையில் மூன்று கேள்விகள் தவறாக குறிப்பிடப்பட்டு இருந்தால் 100 மதிப்பெண்ணிற்கு பதிலாக 97 மதிப்பெண்ணிற்கு மட்டுமே ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே பொது பிரிவினர் 29.10 சதவீதம், எம்.பி.சி., ஓ.பி.சி., மீனவர், முஸ்லீம் இ.டபுள்யூ.எஸ்., பிரிவினருக்கு 24.25 சதவீதம், எஸ்.சி., எஸ்.டி., பி.டி. , மாற்றுதிறனாளிகளுக்கு 19.40 சதவீதமாக தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது.

