தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழில்நுட்ப பல்கலையில் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு

 தொழில்நுட்ப பல்கலையில் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு

 தொழில்நுட்ப பல்கலையில் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு


ADDED : பிப் 28, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 05:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் (நாஸ்காம்) சார்பில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் இணைய பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடந்தது.

பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த கருத்தரங்கில் செயற்கை நுண்ணறிவு சிறப்பு நிபுணர் மாதவ் பிஸ்ஸா, 'செயற்கை நுண்ணறிவு முன்னேற்ற போக்குகள் மற்றும் மென்பொருள் உருவாக்க பயன்பாட்டு சுழற்சியில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு' என்ற தலைப்பில் பேசினார்.

இந்திய தரவு பாதுகாப்பு கவுன்சில் அஷ்வினி ராத், 'செயற்கை நுண்ணறிவு காலத்தில் இணைய பாதுகாப்பு மற்றும் தொழில் வாய்ப்பு பாதைகள்' என்ற தலைப்பில் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் இணைய பாதுகாப்பு துறையில் உருவாகும் புதிய சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.

புதுச்சேரி இன்டெக்ரா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்ரீராம் சுப்ரமணியா, அமைச்சர் லட்சுமி நாராயணன் வாழ்த்திப் பேசினர்.

நிகழ்ச்சியில் எதிர்காலத்திற்கு தேவையான செயற்கை நுண்ணறிவு திறன்கள், தொழில் வாய்ப்புகள் மற்றும் தொழில் துறையின் எதிர்பார்ப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 500 மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை பல்கலைக்கழக துணை வேந்தர் மோகன் வழிகாட்டுதலின்படி, பேராசிரியர்கள் இளவரசன், விவேகானந்தன், செல்வராஜூ, சரளா மற்றும் நாஸ்காம் நிபுணர் குழுவினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us