/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மானியத்தில் விசை தெளிப்பான் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
/
மானியத்தில் விசை தெளிப்பான் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
மானியத்தில் விசை தெளிப்பான் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
மானியத்தில் விசை தெளிப்பான் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : டிச 12, 2025 05:13 AM
புதுச்சேரி: பேட்டரி மூலம் இயங்கும் விசை தெளிப்பானை, மானிய விலையில் பெறுவதற்கு வரும் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
வேளாண் இணை இயக்குனர் (தோட்டக்கலை பிரிவு) விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, வேளாண் துறையின் தோட்டக்கலை பிரிவு சார்பில், மத்திய அரசின் தோட்டக்கலை இயக்ககம் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெறும் பொருட்டு பேட்டரி மூலம் இயங்கும் விசை தெளிப்பான் மானிய விலையில், பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை, தாவரவியல் பூங்காவில் இயங்கும் கூடுதல் வேளாண் இயக்குனர் (தோட்டக்கலை) அலுவலகம் மூலமாகவோ அல்லது வேளாண் துறையின் இணையதளம் (https://agri.py.gov.in) மூலமாகவோ பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 22ம் தேதிக்குள், மேற்கண்ட அலுவலகத்தில் சமர்ப்பித்திட வேண்டும். ஏற்கனவே, விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

