தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பட்டய பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

பட்டய பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

பட்டய பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : ஆக 06, 2025 12:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2025 12:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத் தில், பட்டய பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மாநில கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண் இயக்குநர் வீரவெங்கடேஷ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையம், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துடன் இணைந்து, ஓராண்டு கால முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி வகுப்பு நடத்த அனுமதி பெற்றுள்ளது. இப்பட்டய படிப்பு இரு பருவங்களாக நடக்கிறது.

இந்த வகுப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் கூட்டுறவு மேலாண்மை, நிதி மேலாண்மை, நிர்வாகம், வங்கியல், கணக்கியல், தணிக்கை, கடன் மற்றும் கடன் சார்பற்ற சங்கங்கள், கூட்டுறவு மற்றும் இதர சட்டங்கள், கணினி மேலாண்மை, நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும், திட்ட அறிக்கை தயார் செய்தல் போன்றவை அளிக்கப்படுகிறது.

பயிற்சி வகுப்பில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் சான்றிதழ் வழங்கப்படும்.

இச்சான்றிதழ் பெற்றவர்கள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கூட்டுறவுத்துறை, கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகளில் பணியில் சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பயிற்சியில் சேர விருப்பம் உள்ளோர் www.tncu.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் வரும் 22ம் தேதி மாலை 5:00 மணிக்குள், ரூ.100 செலுத்தி விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பதிவேற்றம் செய்த கட்டண ரசீது நகல் மற்றும் விண்ணப்பத்தினை பதி விறக்கம் செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையம், 62, சுய்ப்ரேன் வீதி, புதுச்சேரி என்ற முகவரியில் நேரில் வந்து பயிற்சிக்கான கட்டணம் ரூ. 20 ஆயிரத்து 750யை செலுத்தி நேரடியாக சேர்ந்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை www.tncu.tn.gov.in ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு 0413- 2331408, 2220105 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us