/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : பிப் 19, 2024 05:14 AM

புதுச்சேரி: முத்தரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில், போதை ஒழிப்பு, மன அழுத்தம் மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
உலக மனநாளை முன்னிட்டு, என்.எஸ்.எஸ்., சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வர் கோகிலாம்பாள் தலைமை தாங்கினார். விரிவுரையாளர் ஸ்ரீராம் வரவேற்றார்.
நாடக்குழு தலைவர் ராஜா வாழ்த்துரை வழங்கினார்.
மன நலம் மற்றும் மாணவர்கள் மன நலம் குறித்து கதிர்காமம் மருத்துவ கல்லுாரி மனநல மருத்துவர் கெஜலட்சுமி, மருத்துவர் நவனித் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். தொடர்ந்து ராகவேந்திரா கலைக்குழு சார்பில் விழிப்புணர்வு நாடகம் நடந்தது.
என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சரவணன் தொகுத்து வழங்கினார்.
ஓவிய ஆசிரியர் இளமுருகன் நன்றி கூறினார்.

