/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏ.எப்.டி., மைதானத்தில் தற்காலிக பஸ் நிலையம் புதுச்சேரி நகராட்சி அறிவிப்பு

ADDED : மார் 16, 2024 06:17 AM
புதுச்சேரி: புது பஸ் நிலையம் புதுப்பிக்கும் பணி நடப்பதால்,பொதுமக்கள் தற்காலிக பஸ் நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி புதிய பஸ் நிலையம் இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே பஸ் உரிமையாளர்கள், கடை வியாபாரிகள், ஓட்டுநர்கள், ஆட்டோ, டெம்போ ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் மற்றும் பயணிகள் அனைவரின் நலன் கருதி வரும் 22ம் தேதி முதல் பஸ் நிலையம் ஏ.எப்.டி., மைதானத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து அனைத்து வழி தடங்களிலும் பஸ்கள் இயக்கப்படும். கட்டுமான பணிகள் முடியும் வரை, ஏற்படும் இன்னல்களை அனைவரும் பொறுத்துக் கொண்டு புதிய பஸ் நிலையம் பணிகள் விரைந்து முடிக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.