/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூர் சிவன் கோவிலில் நாளை அன்னாபிஷேகம்
/
பாகூர் சிவன் கோவிலில் நாளை அன்னாபிஷேகம்
ADDED : நவ 14, 2024 07:28 AM
பாகூர்; பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் நாளை அன்னாபிஷேகம் நடக்கிறது.
பாகூரில் 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த வேதாம்பிகை சமேத ஸ்ரீமூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், நாளை ஐப்பசி மாதம் பவுர்ணமியையொட்டி, மூலநாதர் சுவாமிக்கு அன்னாபி ேஷகம் நடக்கிறது. காலை 6:00 மணிக்கு வேதாம்பிகையம்மன், மூலநாதர், பாலவிநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு மூலநாதர் சுவாமிக்கு அன்னம், காய்கறி மற்றும் பழங்களால் அபி ேஷகம் செய்து, அன்னாபிஷேக தரிசனம் நடக்கிறது.
இரவு 7:00 மணிக்கு மகா தீபாரதனை செய்து, சுவாமியின் திருமேனியில் உள்ள அன்னம் கலைந்து சண்டிகேஸ்வரர் சுவாமியை வலம் வந்து கோவிலின் தீர்த்த குளத்தில் கரைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
அன்னாபிஷேகத்தில் பங்கேற்று தரிசனம் செய்தால், கோடி லிங்கத்தை ஒரே நேரத்தில் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி, அர்ச்சகர்கள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.

