/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏ.டி.எம்., மையத்தில் துாங்கிய போதை வாலிபரால் பரபரப்பு
/
ஏ.டி.எம்., மையத்தில் துாங்கிய போதை வாலிபரால் பரபரப்பு
ஏ.டி.எம்., மையத்தில் துாங்கிய போதை வாலிபரால் பரபரப்பு
ஏ.டி.எம்., மையத்தில் துாங்கிய போதை வாலிபரால் பரபரப்பு
ADDED : அக் 03, 2024 05:02 AM
புதுச்சேரி : புதுச்சேரி, ஏ.டி.எம்., மையத்தில் ஏ.சி., காற்று வாங்கியபடி துாங்கிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி, நீடராஜப்பையர் வீதியில் ஏ.டி.எம். மையம் இயங்கி வருகிறது. இங்கு, தினமும் ஏராளமான பொதுமக்கள், பணம் எடுத்தும், செலுத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மது போதையில் வாலிபர் ஒருவர் ஏ.டி.எம்., மையத்திற்குள் நுழைந்து, ஓசியில் ஏ.சி., காற்றை வாங்கியப்படி ஒய்யாரமாக துாங்கினார். இதைகண்ட வாடிக்கையாளர்கள் பெரியக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஏ.டி.எம்., மையத்தில் போதையில் படுத்து துாங்கிய வாலிபரை விரட்டி அடித்தனர்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.