/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 17, 2025 12:18 AM

பாகூர்; அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், பாகூர் கொம்யூன் கமிட்டி சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
பாகூர் தாசில்தார் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கொம்யூன் தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். செயலாளர் அரிதாஸ் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் தமிழ்செல்வன், மாநில பொருளாளர் தட்சணாமூர்த்தி, மாநில துணை செயலாளர்கள் சரவணன், கலியன் ஆகியோர் கோரிக்கைளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், விவசாய தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்திட வேண்டும். விபத்தில் இறக்கும் விவசாய தொழிலாளர்களின் குடும்பத்திற்கு பாதுகாப்பு நிதியாக 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மாநில குழு செல்வராசு, முருகையன், பானுமதி, வளர்மதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.