/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லேசான மழைக்கு தாக்குபிடிக்காத ஏ.எப்.டி. மைதான பஸ் ஸ்டாண்ட்
/
லேசான மழைக்கு தாக்குபிடிக்காத ஏ.எப்.டி. மைதான பஸ் ஸ்டாண்ட்
லேசான மழைக்கு தாக்குபிடிக்காத ஏ.எப்.டி. மைதான பஸ் ஸ்டாண்ட்
லேசான மழைக்கு தாக்குபிடிக்காத ஏ.எப்.டி. மைதான பஸ் ஸ்டாண்ட்
ADDED : அக் 15, 2024 06:27 AM

சேறும் சகதியுமாக மாறியதால் பயணிகள் அவதி
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று காலை முதல் பெய்த மழை காரணமாக ஏ.எப்.டி., மைதான தற்காலிக பஸ் ஸ்டாண்ட் சேறும் சகதியுமாக மாறியதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
புதுச்சேரி ராஜிவ்காந்தி புதிய பஸ் ஸ்டாண்ட் இடித்து புதிதாக கட்டும் பணி நடந்து வருவதால், கடலுார் சாலை ஏ.எப்.டி. மைதானம் தற்காலிக பஸ் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தற்காலிக பஸ் நிலையம் இயங்கி வருகிறது.
புதுச்சேரியில் நேற்று காலை முதல் மாலை வரை விட்டு விட்டு லேசான மழை பெய்து வந்தது. இதனால் ஏ.எப்.டி. மைதான தற்காலிக பஸ் ஸ்டாண்ட் சேறும் சகதியுமாக மாறியது.
போதிய அளவில் நிழற்குடைகளும் இல்லாததால் ஆயுதபூஜை தொடர் விடுமுறைக்கு பிறகு சென்னை, காரைக்கால், திருவண்ணாமலை உள்ளிட்ட வெளியூர் செல்ல வந்த பயணிகள் மழையிலும், சேறும் சகதியில் நின்றிருந்தனர்.
சாதாரண மழைக்கு கூட தாக்கு பிடிக்க முடியாமல் சேறும் சகதியுமாக மாறும் தற்காலிக பஸ் நிலையம், வரக்கூடிய வடகிழக்கு பருவமழையின்போது மிக மோசமான நிலைக்கு செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.
அதனால் புதிய பஸ் நிலைய பணியை விரைவாக முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

