ADDED : மார் 19, 2024 05:09 AM

பாகூர்: கிருமாம்பாக்கம் பகுதியில் பல்வேறு அரசியல் கட்சியினரின், சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படாமல் உள்ளது.
புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமுலில் உள்ள நிலையில், அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள், கொடி கம்பங்கள் அகற்றிடவும், கட்சி தலைவர்களின் சிலைகளை மூடி வைக்க வேண்டும் என பல்வேறு உத்தரவுகளை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. அதன்பேரில், உள்ளாட்சி, பொதுப்பணித்துறை, போலீசார் அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள் அழிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், கிருமாம்பாக்கம், சேலியமேடு, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பா.ஜ., காங்., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள் அழிக்கப்படாமலும், கொடி கம்பங்கள் அப்புறப்படுத்தப்படாமல் காற்றில் பறந்து வருகிறது. கிருமாம்பாக்கம் பகுதியில் பல்வேறு அரசியல் கட்சியினரின் கொடிகள் மற்றும் சுவர் விளம்பரம் அழிக்கப்படாமல் உள்ளது.

