/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதை பொருள் விற்பனையை தடுக்காத மாநில அரசை கண்டித்து அ.தி.மு.க., மனித சங்கிலி
/
போதை பொருள் விற்பனையை தடுக்காத மாநில அரசை கண்டித்து அ.தி.மு.க., மனித சங்கிலி
போதை பொருள் விற்பனையை தடுக்காத மாநில அரசை கண்டித்து அ.தி.மு.க., மனித சங்கிலி
போதை பொருள் விற்பனையை தடுக்காத மாநில அரசை கண்டித்து அ.தி.மு.க., மனித சங்கிலி
ADDED : மார் 13, 2024 12:03 AM

புதுச்சேரி, : புதுச்சேரியில் அரசியல் கட்சி தலைவர்கள் பாதுகாப்புடன் போதை பொருள் விற்பனை நடக்கிறது என அ.தி.மு.க., குற்றம்சாட்டி உள்ளது.
புதுச்சேரியில் போதை பொருள் விற்பனையை தடுக்காத மாநில அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் மனித சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது. மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். அவை தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார்.
ஜெ., பேரவை செயலாளர் பாஸ்கர், இணைச் செயலாளர் கணேசன், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் அன்பழகன் கூறியதாவது;
புதுச்சேரியில் அனைத்து வகை போதை பொருட்கள் தடையின்றி கிடைக்கிறது. பப், ரெஸ்ட்டோ பார்களில் இவை விற்பனை செய்கின்றனர். சில அரசியல் கட்சி தலைவர்கள் பாதுகாப்புடன் போதை பொருள் விற்பனை நடக்கிறது.
போதை பொருள் பழக்கத்திற்கு ஆளான நபரால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்தார்.
புதுச்சேரிக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கொண்டு வருவதை தடுக்க எல்லையில் போலீஸ் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
சர்வதே போதை பொருள் கடத்தல் ஜாபர் சாதிக்குடன் பலர் புதுச்சேரியில் தொடர்பில் உள்ளனர். புதுச்சேரி போலீசார் அத்தகைய நபர்களிடம் விசாரணை நடத்த வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை அரசு தடுக்கும் வரை அ.தி.மு.க. சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என பேசினார்.

