தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தெப்ப உற்சவம்

திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தெப்ப உற்சவம்

திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தெப்ப உற்சவம்


ADDED : ஜூலை 30, 2025 06:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2025 06:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார் : கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தெப்ப உற்சவம் நேற்று நடந்தது.

வில்லியனுார், கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேர் திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடக்கும் விழாவில் தினசரி காலையில் சிறப்பு அபிேஷகம், இரவு 7:00 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி மாட வீதியுலா நடந்து வருகிறது.

முக்கிய விழா கடந்த 27ம் தேதி ஆடிப்பூர தேர் திருவிழா நடந்தது. 28ம் தேதி சுவாமிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி, நேற்று புதுச்சேரி மாநில அனைத்து மீனவர் குல மரப்பினர்கள் சார்பில், தெப்ப உற்சவம் நடந்தது.

எதிர்க்கட்சி தலைவர் சிவா, சாய்சரவணன் குமார் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக விழாவிற்கு வந்தவர்களை விழாக்குழு தலைவர் இளங்கோ வரவேற்றார். விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி திருக்காமீஸ்வரன் தலைமையில் உற்சவதார்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us