/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலைகளில் மாடுகள் திரிந்தால் உரிமையாளர் மீது நடவடிக்கை
/
சாலைகளில் மாடுகள் திரிந்தால் உரிமையாளர் மீது நடவடிக்கை
சாலைகளில் மாடுகள் திரிந்தால் உரிமையாளர் மீது நடவடிக்கை
சாலைகளில் மாடுகள் திரிந்தால் உரிமையாளர் மீது நடவடிக்கை
ADDED : டிச 12, 2025 05:06 AM
புதுச்சேரி: போக்குவரத்திற்கு இ டையூறு செய்யும் வகையில் சாலைகளில் மாடுகள் திரிந்தால், அதன் உரிமை யாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் செய்திக்குறிப்பு:
உழவர்கரை நகராட்சி பகுதியில் மாடு வளர்ப்பவர்கள், மாடுகளை சாலையோரங்களில் கட்டி வைத்து வருகின்றனர்.
மேலும், போக்குவரத்து இடையூறு செய்யும் வகையில், மாடுகள் சாலையில் திரிந்து வருகின்றன.
மாடுகளை சாலையில் விடாமல், வீட்டில் கட்டி வைத்து வளர்க்க வேண்டும் என, நகராட்சி சார்பில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, மாடுகளை பராமரிக்காமல், 45வது, சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை, ஊழியர்கள் பிடித்து சென்றனர். மாட்டின் உரிமையாளர்கள் 4 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து, சாலையில் மாடுகள் நின்றால், அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்கப்படும். இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என, எச்சரிக்கை விடுத்துள்ளார்.

