/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாப்பிள்ளைக்கு 470 வகை உணவு விருந்து ஏனாமில் மணமகள் வீட்டார் அசத்தல்

ADDED : ஜன 14, 2025 06:46 AM

புதுச்சேரி: ஏனாமில் பொங்கல் பண்டிகையையொட்டி, புதுமாப்பிள்ளைக்கு 470 வகை உணவு விருந்து வைத்து மணமகள் வீட்டார் அசத்தினர்.
புதிதாக திருமணம் செய்த தம்பதிகளுக்கு, தமிழகம், புதுச்சேரியில் தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது மணமகள் வீட்டிற்கு அழைத்து, மாப்பிள்ளைக்கு விருந்து அளிப்பது வழக்கம்.
ஆந்திர மாநிலத்தில், பொங்கல் பண்டிகை 'சங்கராந்தி' என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். அங்கு புதிதாக திருமணம் செய்த மணமக்களை மணமகள் வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்து, புதுமாப்பிள்ளையை கவுரவிப்பது வழக்கம்.
அதன்படி, ஆந்திராவை ஒட்டியுள்ள புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில், வர்த்தக சங்க செயல் தலைரான சத்யபாஸ்கர் வெங்டேஸ்வர் மகள் ஹரின்யாவுக்கும், விஜயவாடாவை சேர்ந்த ஷாகேத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த புதுமண தம்பதிக்கு, ஏனாமில் உள்ள தாய் வீட்டில், நேற்று சங்கராந்தி விருந்து வைக்கப்பட்டது. அப்போது, தம்பதிக்கு 470 வகை உணவுகளுடன் விருந்து வைத்து அசத்தினர்.
இந்த விருந்தில் மணமக்களுக்கு பிடித்த உணவுகள், இனிப்புகள், உள்ளூர் வகை உணவு தொடங்கி பல வெளிமாநில உணவுகளும் இடம்பெற்றன.