/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
75 மணி நேர கலை நிகழ்ச்சி நிறைவு; இசை கலைஞர்கள் கவுரவிப்பு
/
75 மணி நேர கலை நிகழ்ச்சி நிறைவு; இசை கலைஞர்கள் கவுரவிப்பு
75 மணி நேர கலை நிகழ்ச்சி நிறைவு; இசை கலைஞர்கள் கவுரவிப்பு
75 மணி நேர கலை நிகழ்ச்சி நிறைவு; இசை கலைஞர்கள் கவுரவிப்பு
ADDED : பிப் 03, 2024 07:34 AM

புதுச்சேரி : அசிஸ்ட் உலக சாதனை தொடர் 75 மணி நேர கலை நிகழ்ச்சி நிறைவு விழா நடந்தது.
நாட்டின் 75வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு அசிஸ்ட் உலக சாதனைக்காக 75 மணி நேர தொடர் இயல், இசை, நாடகம், நாட்டியம், ஓவியம், சிற்பம், நாட்டுப்புற கலைகளின் நிகழ்ச்சிகள் கடந்த 29ம் தேதி துவங்கின.
நிறைவு நாள் நிகழ்ச்சி தமிழ்சங்கத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்ற சினிமா பாடகர் கிருஷ்ணா, இசை கலைஞர்கள் வெங்கட், வாசுதேவன், ரிச்சர்ட் ஆகிய குழுவினருக்கு சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
நிகழ்ச்சியில் கலைமாமணி விருதாளர் சங்க நிறுவனர் தமிழ்வாணன், முனைவர் முத்து, அசிஸ்ட் உலக சாதனை நிறுவனர் ராஜேந்திரன், டாக்டர் ஜோதிசெந்தில்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.