தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தி.மு.க., அலுவலகம் முற்றுகை: எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 60 பேர் கைது

 தி.மு.க., அலுவலகம் முற்றுகை: எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 60 பேர் கைது

 தி.மு.க., அலுவலகம் முற்றுகை: எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 60 பேர் கைது


ADDED : பிப் 07, 2026 03:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 03:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தனியார் தொலைக்காட்சி நிருபரை, தாக்கியதை கண்டித்து, தி.மு.க., அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 2 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டத்தில், சட்ட விரோத கனிம வள கொள்ளையை அம்பலப்படுத்திய தனியார் தொலைக்காட்சி நிருபரை, தி.மு.க., எம்.எல்.ஏ., வின் ஆட்கள் தாக்கியதை கண்டித்து, புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

சட்டசபை அருகே உள்ள சம்பா கோவில் அருகில், ல.ஜ.க., தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் அங்காளன், சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அனைவரும், லப்போர்த் வீதியில் உள்ள தி.மு.க., அலுவலகத்தை முற்றுகையிட காந்தி வீதி வழியாக ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை, சின்னவாய்க்கால் அருகே சென்ற போது, ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் பேரிகார்டு அமைத்து, ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி, கலைந்து போக கூறினர். ஆனால், அவர்கள் தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்றதை தொடர்ந்து, ஊர்வலத்தில் வந்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், எம்.எல்.ஏ.,க்கள் அங்காளன், சிவச ங்கர் உள்ளிட்ட 60 பேரை கைது செய்து, வேனில் ஏற்றி ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.

இச்சம்பவத்தால், அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us