/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
"கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் கட்சி காங்கிரஸ்": புதுச்சேரியில் கார்கே பிரசாரம்

ADDED : ஏப் 15, 2024 04:23 PM

புதுச்சேரி: 'கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் கட்சி காங்கிரஸ்' என அக்கட்சி தலைவர் கார்கே கூறினார்.
புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தில் கார்கே பேசியதாவது: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுப்போம் என பா.ஜ., தேர்தல் அறிக்கையில் கூட கூறவில்லை. மத்திய பா.ஜ., அரசு புதுச்சேரி மக்களை புறக்கணிக்கிறது. புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை நாங்கள் திறப்போம்.
மாநில அந்தஸ்து
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தருவதாக ராகுல் உறுதி அளித்துள்ளார். புதுச்சேரியில் கவர்னரை வைத்து காங்கிரஸ் அரசுக்கு பா.ஜ.,வினர் தொல்லை கொடுத்தனர். பிரதமரிடம் சரணடைந்துவிட்ட ரங்கசாமியை பார்த்து பரிதாபப்படுகிறேன். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் கட்சி காங்கிரஸ்.
மோடியின் கேரன்டி பொய்
444 எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கியவர் பிரதமர் மோடி. பா.ஜ., கொள்கையை ஏற்காத அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு தொல்லை கொடுக்கும் வேலையை பா.ஜ., செய்து வருகிறது. தேர்தலை சந்திக்காமல் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வருவது தான் பா.ஜ.,வின் வேலை. பிரதமர் மோடி எந்த கேரண்டி கொடுத்தாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள் நம்ப தயார் ஆக இல்லை. பிரதமர் மோடியின் கேரன்டி பொய். இவ்வாறு அவர் பேசினார்.