/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாஜி ராணுவ அதிகாரியிடம் ரூ.33.87 லட்சம் 'அபேஸ்' தம்பதி மீது வழக்குப் பதிவு

ADDED : அக் 21, 2024 05:53 AM
புதுச்சேரி: வைத்திக்குப்பத்தில் முன்னாள் ராணுவ அதிகாரியிடம் ரூ.33.87 லட்சம் ஏமாற்றிய தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, வைத்திக்குப்பம் பாப்பாம்மாள் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திர பட்டேல், 73; முன்னாள் ராணுவ அதிகாரி. இவருக்கு, அதேப் பகுதியை சேர்ந்த முருகன், அவரது மனைவி காயத்ரி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து, முருகன் மற்றும் அவரது மனைவி காயத்ரி ஆகியோர், கடந்த 2020ம் ஆண்டு ராஜேந்திர பட்டேல் வீட்டிற்கு சென்று, ஓய்வூதிய தொகையை தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என, கூறினர்.
அதை நம்பிய ராஜேந்திர பட்டேல், அவர்களிடமே நிதி நிறுவனங்களில் முதலீடு செய்தவதற்காக 33 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் வரை பல தவணைகளாக வழங்கினார்.
அதற்கு, முருகனும் தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்தது, போன்று ஆவணங்களை ராஜேந்திர பட்டேலிடம் கொடுத்தார்.அந்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அவை அனைத்தும் போலியானது என, தெரியவந்தது.
இதுகுறித்து, ராஜேந்திர பட்டேல் அளித்த புகாரின் பேரில், முருகன், அவரது மனைவி காயத்ரி ஆகியோர் மீது முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.