ADDED : மார் 15, 2024 05:50 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: அமலாக்க உதவியாளர்களுக்கு இரண்டாம் கட்டமாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
புதுச்சேரி அரசு, போக்குவரத்துத் துறையில் காலியாக இருந்த அமலாக்க உதவியாளர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.
இதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 17 பேருக்கு முதல்வர் ரங்கசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலில் இருந்த 7 நபர்களுக்கு இரண்டாவது கட்டமாக நேற்று பணியாணை வழங்கப்பட்டது.
முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் உள்ள தனது அலுவலகத்தில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
