/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வலையில் சிக்கிய 20 கிலோ கெண்டை மீன்
/
வலையில் சிக்கிய 20 கிலோ கெண்டை மீன்
ADDED : டிச 17, 2024 05:11 AM
அரியாங்குப்பம்: மீன் வலையில், அதிக எடையுள்ள, கெண்டை மீன் சிக்கியது.
கனமழை பெய்ததை அடுத்து, வீடூர் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து, நோணாங்குப்பம் ஆற்றில், கடந்த 2ம் தேதி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெளியில் இருந்து, வளர்ப்பு கெண்டை, விரால் உள்ளிட்ட மீன்கள் ஆற்றில் அதிகளவில் வந்தது. அவற்றை பிடிக்க, மீன் பிடிப்பவர்கள், நோணாங்குப்பம் பழைய பாலத்தில், நின்று, வலை மற்றும் துாண்டில் போட்டு, மீன்களை பிடித்து வருகின்றனர்.
அதையடுத்து, கடந்த இரண்டு வாரங்களாக, அங்கு பிடித்த உயிர் மீன்களை, அங்கேயே குறைந்த விலையில், விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் நேற்று மதியம் 2:00 மணியளவில், ஆற்றில், வீச்சு வலை மூலம் மீன் பிடித்து கொண்டிருந்தார். அதில் திடீரென வலையில், 20 கிலோ எடையுள்ள கெண்டை மீன் சிக்கியதால், அவர் மகிழ்ச்சியடைந்தார்.
ஒரு கிலோ, கெண்டை மீன், ரூ 200க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை, சிறிய அளவில் மட்டுமே மீன்கள் கிடைத்து வந்தது.
அதிக எடையுள்ள, ஒரே மீன் கிடைத்து, அதிக விலைக்கு விற்கலாம் என அவர் தெரிவித்தார்.

