தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/2 அரசு செயலர்களுக்கு கூடுதல் பொறுப்பு 

2 அரசு செயலர்களுக்கு கூடுதல் பொறுப்பு 

2 அரசு செயலர்களுக்கு கூடுதல் பொறுப்பு 


ADDED : பிப் 21, 2024 09:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2024 09:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அரசு செயலர்கள் இரண்டு பேருக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு செயலர் (விவசாயம்) ஜெயந்த குமார் ரே, உத்தரகாண்ட் மாநிலம் முசோரி லால்பகதுார் சாஸ்திரி தேசிய நிர்வாக அகடமி ஆப் அட்மினிஸ்ட்ரேஷனில் நேற்று முன்தினம் (19ம் தேதி) முதல் மார்ச் 29ம் தேதி வரை நடக்கும் 125வது பயிற்சி முகாமில் பங்கேற்க சென்றுள்ளார்.

இதையடுத்து, அவர் கவனித்து வந்த துறைகள் இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, (ஊரக வளர்ச்சித் துறை) அரசு செயலர் நெடுஞ்செழியனுக்கு, கால்நடை பராமரிப்பு, வனம், விவசாயம், இந்து அறநிலைய துறை மற்றும் வக்பு வாரியம் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் (பணியாளர்கள் ) அரசு செயலர் கேசவனுக்கு, பொதுப்பணித்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா, ஸ்மார்ட் சிட்டி முதன்மை நிர்வாக அதிகாரி மற்றும் திட்ட இயக்குனர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கான உத்தரவை அரசு சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us