/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் 18வது பட்டமளிப்பு விழா
/
தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் 18வது பட்டமளிப்பு விழா
தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் 18வது பட்டமளிப்பு விழா
தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் 18வது பட்டமளிப்பு விழா
ADDED : மார் 12, 2024 06:44 AM

புதுச்சேரி : பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரியில் 18வது பட்டமளிப்பு விழா நடந்தது.
விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயலாளர் நீல்ராஜ் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் சண்முக சுந்தரம் வரவேற்று,அறிக்கையை வாசித்தார்.
முதன்மை விருந்தினராக மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுவின் தலைமை ஒருங்கிணைப்பு அதிகாரி புத்தா சந்திரசேகர் கலந்து கொண்டுபல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற 13 மாணவர்கள் உட்பட 999 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்,நமது நாடு தற்போது வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இருந்து தற்போது வளர்ந்த நாடுகள் பட்டியலில் சேர்ந்துள்ளது.
நீங்கள் புதிய தொழில் நுட்பங்களை கண்டுபிடிப்பவர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும், சிறந்த தொழில் முனைவோர்களாகவும் ஆக வேண்டும்.
தற்போது உலகம் டிஜிட்டல் மயமாக மாறிவருகிறது. இந்த டிஜிட்டல் உலகில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் வேலை செய்ய சுமார் 40 கோடி திறமையான பொறியியல் பட்டதாரிகள் தேவைபடுகின்றனர்.
உலக சந்தையில் இந்திய பொறியியல் பட்டதாரிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு உள்ளது . எனவே பட்டம் பெரும் ஒவ்வொரு பட்டதாரியும் மிக உயர்ந்த குறிக்கோளை மனதில் நிலை நிறுத்திஅதை அடைய இலட்சியத்துடன் உழைக்க வேண்டும் என தெரிவித்தார்.
விழாவில் எச்.டி.சி., குளோபல் சர்வீசஸ், சென்னை நிறுவனத்தின் துணை தலைவர் நட்ராஜ் குமார் சந்திரசேகர், ஐ.சி.டி அகாடெமியின் துணை தலைவர் ராகவா சீனிவாசன் ஆகியோர் பேசினர்.
விழாவில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தின் கூடுதல் பதிவாளர் இளங்கோவன், தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அதிகாரி முனைவர் நந்தகுமார், டீன்கள் வேல்முருகன், அன்பரசன், சிவராமன், சண்முக சுந்தரம், அன்பு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

