/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னர் மாளிகை முற்றுகை 5 எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 134 பேர் கைது
/
கவர்னர் மாளிகை முற்றுகை 5 எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 134 பேர் கைது
கவர்னர் மாளிகை முற்றுகை 5 எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 134 பேர் கைது
கவர்னர் மாளிகை முற்றுகை 5 எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 134 பேர் கைது
ADDED : மார் 09, 2024 02:52 AM

போலீசார், போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு
புதுச்சேரி: கவர்னர் மாளிகையை முற்றுகையிட்ட இண்டியா கூட்டணி 5 எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 134 பேரை போலீசார் கைது செய்து விடுவித்தனர்.
புதுச்சேரி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டும், கஞ்சாவை ஒழிக்க தவறிய முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதவி விலக கோரி இண்டியா கூட்டணி சார்பில் நேற்று பந்த் போராட்டம் நடந்தது. காலை 10:00 மணிக்கு ராஜா தியேட்டர் எதிரில் இண்டியா கூட்டணி கட்சியினர் கூடினர்.
காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, அனந்தராமன், தி.மு.க., சார்பில் எதிர்கட்சி தலைவர் சிவா, எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், கென்னடி, சம்பத், இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், துணை செயலாளர் சேதுசெல்வம், மா.கம்யூ., ராஜாங்கம் உள்ளிட்டோர் கூடினர்.
மாநில அரசை கண்டித்து நேரு வீதி வழியாக பேரணியாக சென்றனர். மிஷன் வீதி சந்திப்பு அருகே போலீசார் பேரிகார்டு அமைத்து தடுத்தனர். தடுப்பை மீறி மிஷன் வீதி, ரங்கப்பிள்ளை வீதி வழியாக தலைமை தபால் நிலையம் அடைந்தனர். அங்கு பேரிகார்டு அமைத்து போலீசார் தடுத்தனர்.
ஆனால் போதிய அளவில் போலீசார் இல்லை. அங்கு திரண்ட கூட்டணி கட்சியினரை தடுக்க முடியாமல் போலீசார் திணறினர். போராட்டக்காரர்கள் பேரிகார்டுகளை தாண்டி செல்ல முயற்சித்தபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் கொடி கம்புகளால் போலீசாரை தாக்கினர். பதிலுக்கு போலீசாரும் சில அடி கொடுத்தனர்.
பேரிகார்டுகளை தாண்டி சென்ற சிலர், கவர்னர் மாளிகை முன்பு ஓடிச்சென்று அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
போலீசார் அவர்களை கைது செய்தனர். பேரிகார்டுகளை தாண்டி வந்த பெண்கள், திருநங்கைகள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டத்தால் கவர்னர் மாளிகை சுற்றி பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட இண்டியா கூட்டணியைச் சேர்ந்த தி.மு.க., மற்றும் காங்., எம்.எல்.ஏ.,க்கள் 5பேர் உட்பட 134 பேர் கைது செய்துவிடுவிக்கப்பட்டனர்.

