/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,230 வழக்குகளுக்கு தீர்வு
/
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,230 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,230 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,230 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : செப் 14, 2025 01:52 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,230 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, 10 கோடியே 37 லட்சத்து 48 ஆயிரத்து 342 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் செயல் தலைவரும், உச்சநீதிமன்றத்தின் நீதிபதியுமான சூரியகாந்த் உத்தரவுப்படியும், புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் செயல் தலைவரும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியுமான சுரேஷ்குமார் வழி காட்டுதலின்படி, தேசிய மக்கள் நீதிமன்றம் புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது.
இதேபோல், காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும், மாகே மற்றும் ஏனாம் நீதிமன்ற வளாகத்திலும் நடந்தது.
புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 16 அமர்வுகளும், சட்டப்பணிகள் ஆணையத்தில் 1 அமர்வும் தலைமை நீதிபதி ஆனந்த், சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் அம்பிகா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய செயலர் ரமேஷ் தலைமையில் நடந்தது.
மேலும், காரைக்காலில் 5 அமர்வுகளும், மாகே, ஏனாமில் தலா 1 அமர்வும் என, 24 அமர்வுகள் செயல்பட்டது.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நேரடி வழக்குகள், 6,000 எடுத்துக் கொள்ளப்பட்டு, 1,230 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, 10 கோடியே 37 லட்சத்து 48 ஆயிரத்து 342 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
இவற்றில் நீதிமன்ற நிலுவையில் இருந்த 1,101 வழக்குகள் முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.