தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண்கள் டி - 20 கிரிக்கெட் போட்டி டைமண்ட்ஸ், குயின்ஸ் அணிகள் வெற்றி

பெண்கள் டி - 20 கிரிக்கெட் போட்டி டைமண்ட்ஸ், குயின்ஸ் அணிகள் வெற்றி

பெண்கள் டி - 20 கிரிக்கெட் போட்டி டைமண்ட்ஸ், குயின்ஸ் அணிகள் வெற்றி


ADDED : ஜூலை 21, 2024 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2024 06:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பெண்கள் கிரிக்கெட் போட்டியில், டைமண்ட்ஸ் மற்றும் குயின்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.

புதுச்சேரி கிரிக்கெட் அசோசியேஷன் மற்றும் டி.சி.எம்., நிறுவனம் சார்பில், 20 ஓவர் பெண்கள் கிரிக்கெட் போட்டி, சி.ஏ.பி.சீகெம் மைதானத்தில் நடந்து வருகிறது.

நேற்று காலை நடந்த போட்டியில் டைமண்ட்ஸ் மற்றும் பிரின்சஸ் அணிகள் மோதின. முதலில் களம் இறங்கிய பிரின்சஸ் அணி, 20 ஓவர்களில், 5 விக்கெட்டுகள் இழந்து, 137 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் யுவஸ்ரீ, 41 பந்துகளில், 66 ரன்கள் அடித்தார்.

தொடர்ந்து ஆடிய டைமண்ட்ஸ் அணி, 18.2 ஓவர்களிலேயே, 5 விக்கெட்டுகள் இழந்து, 141 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டைமண்ட்ஸ் அணியின் நிதி தாவ்டா, 38 பந்துகளில், 57 ரன்கள் எடுத்து ஆட்டநாயகி விருது பெற்றார்.

மதியம் நடந்த போட்டியில், ஏஞ்சல்ஸ் மற்றும் குயின்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய குயின்ஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழந்து, 106 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஏஞ்சல்ஸ் அணி, 20 ஓவர்களில், 8 விக்கெட்டுகள் இழந்து 91 ரன்கள் மட்டுமே எடுத்தது. குயின்ஸ் அணி, 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், 3 விக்கெட்டுகள் வீழ்த்திய குயின்ஸ் அணியின் யாஷி பாண்டே ஆட்டநாயகி விருது வென்றார்.

இன்று காலை நடக்கும் இறுதி போட்டியில், முதல் இரண்டு இடங்களை பிடித்த டைமண்ட்ஸ் மற்றும் ஏஞ்சல்ஸ் அணிகள் மோதுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us