/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரேஷன் கடைகளை திறக்காதது ஏன்? தி.மு.க., அமைப்பாளர் சிவா சரமாரி கேள்வி
/
ரேஷன் கடைகளை திறக்காதது ஏன்? தி.மு.க., அமைப்பாளர் சிவா சரமாரி கேள்வி
ரேஷன் கடைகளை திறக்காதது ஏன்? தி.மு.க., அமைப்பாளர் சிவா சரமாரி கேள்வி
ரேஷன் கடைகளை திறக்காதது ஏன்? தி.மு.க., அமைப்பாளர் சிவா சரமாரி கேள்வி
ADDED : ஏப் 03, 2024 02:54 AM

அரியாங்குப்பம் : 'புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?' என, தி.மு.க., அமைப்பாளர் சிவா கேள்வி எழுப்பினார்.
இண்டியா கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கம் அறிமுகம் நிகழ்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் தவளக்குப்பத்தில் நடந்தது.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எதிர்கட்சி தலைவரும், தி.மு.க., அமைப்பாளருமான சிவா, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன், காங்., பொதுச் செயலாளர் திருமுருகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க., அமைப்பாளர் சிவா கூறியதாவது:
உணவு பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாக பெருமையுடன் கூறுகின்றனர். ஆனால், புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்க அனுமதி இல்லை.
இதனால், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே ரேஷன் கடைகள் இல்லாத மாநிலமாக புதுச்சேரி உள்ளது. ரேஷன் கடையை திறக்க அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?
அரிசிக்கு பதிலாக பணமாக வழங்குகின்றனர். அதாவது, ஒரு கிலோவுக்கு ரூ.18.50 தருகின்றனர்.
இதை வைத்து அரிசி வாங்க முடியுமா? மார்க்கெட்டில் ஒரு கிலோ சாப்பாட்டு அரிசி 50 ரூபாய்க்கு மேல் விற்பது ஆட்சி நடத்துபவர்களுக்கு தெரியாதா?
பெட்ரோல், டீசல் விலையை திடீரென குறைத்துள்ளனர். இது, தேர்தலுக்காகவே குறைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நடப்பது எதுவும் சரியாக இல்லை என முதல்வருக்கு புரிகிறது. வேறு வழியின்றி பிரசாரம் செய்து வருகிறார். 'செஞ்சோற்று கடன் தீர்க்க..' என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.
புதுச்சேரியின் தன்மானம் காக்க, காங்., வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.

