/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்ட விரோத டிஜிட்டல் பிரிண்டிங் கடைகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?
/
சட்ட விரோத டிஜிட்டல் பிரிண்டிங் கடைகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?
சட்ட விரோத டிஜிட்டல் பிரிண்டிங் கடைகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?
சட்ட விரோத டிஜிட்டல் பிரிண்டிங் கடைகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?
ADDED : மார் 11, 2025 05:55 AM
புதுச்சேரி: சட்ட விரோத பேனர்களை அச்சடிக்கும் டிஜிட்டல் பிரிண்டிங் கடைகளுக்கு சீல் வைத்தால் மட்டுமே பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.புதுச்சேரி இ.சி.ஆரில் சிவாஜி சிலை முதல் பாக்கமுடையான்பட்டு சந்திப்பு வரை, விளம்பர பேனர்கள் மின்கம்பங்களில் கல்யாண-கடை திறப்பு கோஷ்டிகள் கட்டி வைத்துள்ளனர். வரிசையாக நிற்கும் பேனர்களால் வாகன ஓட்டிகளில் கவனம் சிதறி விபத்து அபாயமும் ஏற்பட்டது.பேனர்களில், அனுமதி அளித்த நாள், அனுமதி எண், அனுமதி அளித்த அளவின் விவரம் மற்றும் அனுமதி வழங்கப்பட்ட கால அவகாசம், பேனர் தயார் செய்த கடையின் பெயர் கட்டாயம் இடம் பெற வேண்டும்.
ஆனால், கல்யாண- கடை திறப்பு கோஷ்டிகள் வைத்த பேனர்களில் இவை ஒன்று கூட இல்லை. இந்த சட்ட விரோத பேனர்களை வைத்தவர்கள் மற்றும் அச்சடித்து கொடுத்த பிரிண்டிங் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் மற்றும் நகராட்சி நிர்வாகங்கள் தயங்குவது ஏன்....
சட்ட விரோத பேனர்களை அச்சடித்து கொடுக்கக்கூடாது என மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகங்கள் சார்பில் பலமுறை கூட்டம் போட்டு அறிவுரை கூறியாகிவிட்டது.
ஆனால் பிரிண்டிங் கடைகள் அரசின் உத்தரவு எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் சட்ட விரோத பேனர்களை அச்சடித்து கொடுத்து வருகின்றனர். இதனால் பேனர் கலாசாரத்தினை ஒழிக்க முடியவில்லை.சட்ட விரோத பேனர்களை அச்சடித்து கொடுக்கும் டிஜிட்டல் பிரிண்டிங் கடைகளில் ஏதேனும் ஒரு கடைக்கு சீல் வைத்து முடக்கினால் மட்டுமே மற்ற கடைகளுக்கு அது பாடமாக அமையும். சட்ட விரோத பேனர்களை அச்சடிக்க யோசிப்பர். சட்ட விரோத பேனர்கள் விஷயத்தில் வெறும் அறிவுரை பலன் தராது. அதிரடி ஆக் ஷன் தான் முக்கியம். விதிமுறைகளை மீறும் டிஜிட்டல் பிரிண்டிங் கடைகள் மீது இனியும் தயவு தாட்சண்யம் பாராமல் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

