தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ., தோற்றது ஏன்? பட்டியலிடுகிறார் இ.கம்யூ., செயலர்

பா.ஜ., தோற்றது ஏன்? பட்டியலிடுகிறார் இ.கம்யூ., செயலர்

பா.ஜ., தோற்றது ஏன்? பட்டியலிடுகிறார் இ.கம்யூ., செயலர்


ADDED : ஜூன் 05, 2024 11:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2024 11:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கத்தை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு இ.கம்யூ., நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுச்சேரி லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கம் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறசெய்த வாக்காளர்களுக்கு இ.கம்யூ., சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்.,- பா.ஜ., அரசு மக்கள் நலனை முற்றிலும் மறந்ததுடன், மாநில அந்தஸ்து கோரிக்கைக்காக எந்த முயற்சியும் எடுக்காமல் துரோகம் இழைத்துள்ளனர்.

அரசு பொதுத்துறை நிறுவனங்களையும், பஞ்சாலைகளையும் மூடு விழா நடத்தினர். ரேஷன் கடையை திறக்கவில்லை. மின்சார துறையை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக, என்.ஆர்.காங்.,- பா.ஜ., அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு தேர்தல் மூலம் மக்கள் சரியான பாடம் புகட்டியிருக்கின்றனர்.

இந்த மகத்தான தீர்ப்பை அளித்த புதுச்சேரி வாக்காளர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us