ADDED : ஏப் 24, 2024 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வேல்ராம்பட்டு ஏரிக்கரை சாலையில் உடைந்திருந்த குடிநீர் குழாய், 'தினமலர்' செய்தி எதிரொலியாக, சீரமைக்கப்பட்டது.
மரப்பாலத்தில் இருந்து, வேல்ராம்பட்டு ஏரிக்கரை சாலையோரமாக, அப்பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்கான குடிநீர் குழாய் செல்கிறது. இங்குள்ள தனியார் கல்லுாரி அருகே, கடந்த 4 நாட்களுக்கு முன் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் ஆறு போல பெருக்கெடுத்தது.
குடிநீர் வீணாவது குறித்து, 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. அதையடுத்து, பொதுப்பணித்துறை ஊழியர்கள் நேற்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடைந்திருந்த குடிநீர் குழாயை மாற்றி, புதிய குழாய் அமைத்து குடிநீர் வினியோகத்தை சீரமைத்தனர்.

