/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாக்குறுதிகளை விளக்கி கூறி காமராஜர் நகர் தொகுதியில் ஓட்டு சேகரிப்பு
/
வாக்குறுதிகளை விளக்கி கூறி காமராஜர் நகர் தொகுதியில் ஓட்டு சேகரிப்பு
வாக்குறுதிகளை விளக்கி கூறி காமராஜர் நகர் தொகுதியில் ஓட்டு சேகரிப்பு
வாக்குறுதிகளை விளக்கி கூறி காமராஜர் நகர் தொகுதியில் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 05, 2024 05:24 AM

புதுச்சேரி: காங்., வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து, அக்கட்சியினர் காமராஜர் நகர் தொகுதி, ஞானபிரகாசம் நகரில் ஓட்டு சேகரித்தனர்.
புதுச்சேரியில் இண்டியா கூட்டணி சார்பில் காங்., வேட்பாளராக வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.
இவரை ஆதரித்து காங்., கட்சியினர் காமராஜர் நகர் தொகுதியில் நேற்று ஓட்டு சேகரித்தனர்.
ஞானபிரகாசம் நகரில், காங்., தொகுதி பொறுப்பாளர் தேவதாஸ் தலைமையில், கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சியினருடன் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவு கேட்டு வீடு விடாக சென்று ஓட்டு சேகரித்தனர்.
பிரதேச காங்., கட்சி உறுப்பினர் ரவிச்சந்திரன், வட்டார காங்., தலைவர் செல்வம், தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் வேலவன், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, தி.மு.க., தொகுதி செயலாளர் சிவக்குமார், வி.சி., கட்சி தொகுதி செயலாளர் அசோக், மக்கள் நீதி மய்யம் தொகுதி செயலாளர் சத்ய நாராயணன், கம்யூ., சாரம் கிளை செயலாளர் ஞானசங்கர், சிறப்பு அழைப்பாளர் லட்சுமணன் செல்வராஜ், காங்., மகளிர் அணி தலைவி பஞ்சகாந்தி, ஜெயலட்சுமி, சுமதி, கலா, இளைஞர் காங்., அன்பரசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஓட்டு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.
இண்டியா கூட்டணி அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளான இளைஞர்களுக்கு ஆண்டிற்கு 1 லட்சம் உதவித்தொகை, அக்னிபாத் திட்டம் திரும்ப பெற்று, பழைய முறைப்படி ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு, அரசு வேலையில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு, தொழிலாளர்களுக்கு ரூ. 400 குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட வாக்குறுதிகள் குறித்து விளக்கி கூறினர்.

