தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விவேகானந்தா மேல்நிலை பள்ளியில் தினமலர் பட்டம் வினாடி வினா போட்டி

விவேகானந்தா மேல்நிலை பள்ளியில் தினமலர் பட்டம் வினாடி வினா போட்டி

விவேகானந்தா மேல்நிலை பள்ளியில் தினமலர் பட்டம் வினாடி வினா போட்டி


ADDED : நவ 09, 2024 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2024 06:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பெத்துசெட்டிபேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில், தினமலர் பட்டம் இதழ் வினாடி வினா போட்டி நடந்தது.

புதுச்சேரி 'தினமலர் பட்டம்' இதழ் மற்றும் ஆச்சார்யா கல்வி குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் பரிசு வெல்' மெகா வினாடி வினா போட்டியின், பள்ளி அளவிலான போட்டி லாஸ்பேட்டை பெத்துசெட்டிப்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா தலைமை தாங்கினார்.

போட்டியில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் 500 மாணவர்கள் கலந்து கொண்டனர். முதல் நிலை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 16 பேர் இறுதி சுற்று போட்டிக்கு தேர்வாகினர். 8 அணிகளாக பிரித்து இறுதி சுற்று போட்டி நடந்தது. இதில், 9ம் வகுப்பு மாணவிகள் பூஜாஸ்ரீ, காயத்ரி முதலிடம் பிடித்தனர். 8ம் வகுப்பு மாணவிகள் ஹரிணி, பிரியாஷினி 2வது இடம் பிடித்தனர்.

வெற்றி பெற்ற இரு அணிகளுக்கும் பதக்கம் மற்றும் பரிசுகளை பள்ளி முதல்வர் கீதா வழங்கி பாராட்டினார். பள்ளி அளவில் வெற்றி பெற்ற இரு அணிகளும், மெகா வினாடி வினா போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us