/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேதபுரீஸ்வரர் கோவில் சொத்தை மீட்டு அறிக்கை அளிக்க உத்தரவு
/
வேதபுரீஸ்வரர் கோவில் சொத்தை மீட்டு அறிக்கை அளிக்க உத்தரவு
வேதபுரீஸ்வரர் கோவில் சொத்தை மீட்டு அறிக்கை அளிக்க உத்தரவு
வேதபுரீஸ்வரர் கோவில் சொத்தை மீட்டு அறிக்கை அளிக்க உத்தரவு
ADDED : மே 15, 2024 01:09 AM
புதுச்சேரி, : காமாட்சியம்மன் கோவில் வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள் தேவஸ்தானத் திற்கு சொந்தமான சொத்தை கையப்படுத்தி, 15 நாட்களில் அறிக்கை அளிக்க இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி முழுதும் உள்ள இந்து கோவில்களுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளது. அவை முறைப்படி ஆவணப்படுத்தப்படாமல் உள்ளதால், கோவிலுக்கு வர வேண்டிய வருவாய் வருவதில்லை. சில கோவில் நிலங்கள் ஆக்கிரமித்து வணிக வளாகம், மாடி வீடுகளாக கட்டப்பட்டுள்ளது.
கோவில் நிலத்தில் கட்டடம் கட்டி மிகப்பெரிய வியாபாரம் செய்வோர், சொற்ப அளவிலான வாடகையை கூட (மாதம் 10 ரூபாய், 20 ரூபாய்) கோவில் நிர்வாகத்துக்கு செலுத்துவதில்லை.
இந்நிலையில், காமாட்சியம்மன் கோவில் வீதியில், வேதபுரீஸ்வரர் வரதராஜ பெருமாள் கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவில் சொத்து உள்ளது. கோவில் சொத்தில் உள்ள வீட்டை அபகரிக்க முயற்சிகள் நடந்தது.
கோவில் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி, இந்துசமய அறநிலையத்துறைக்கு புகார்கள் சென்றன. நில அளவைத் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, வேதபுரீஸ்வரர் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சொத்து என்பதை உறுதி செய்தனர்.
இதைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மற்றும் கோவில் நிர்வாகம், கோவிலுக்கு சொந்தமான சொத்தை கையப்படுத்தி 15 நாட்களுக்கு அறிக்கை தாக்கல் செய்யவும், அந்த இடத்தின் மூலம் கோவில் வருவாய் பெருக்க நடவடிக்கை எடுக்கவும் இந்து சமய அறநிலையத்துறை செயலர் நெடுஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

