/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அ.தி.மு.க., வை 'டிபாசிட்' இழக்க வைக்க பணம் வையாபுரி மணிகண்டன் 'திடுக்' குற்றச்சாட்டு
/
அ.தி.மு.க., வை 'டிபாசிட்' இழக்க வைக்க பணம் வையாபுரி மணிகண்டன் 'திடுக்' குற்றச்சாட்டு
அ.தி.மு.க., வை 'டிபாசிட்' இழக்க வைக்க பணம் வையாபுரி மணிகண்டன் 'திடுக்' குற்றச்சாட்டு
அ.தி.மு.க., வை 'டிபாசிட்' இழக்க வைக்க பணம் வையாபுரி மணிகண்டன் 'திடுக்' குற்றச்சாட்டு
ADDED : ஏப் 15, 2024 04:35 AM
புதுச்சேரி : அ.தி.மு.க.,வை 'டிபாசிட்' இழக்க வைக்க எதிர்க்கட்சி வேட்பாளர்களிடம், பணம் பெறப்பட்டுள்ளதாக, அக்கட்சி மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் குற்றம் சாட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க ., வேட்பாளராக தமிழ்வேந்தனை ஆதரித்து முத்தியால் பேட்டையில் நேற்று ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் அவர் கூறியதாவது:
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க, 'டிபாசிட்' இழக்க வேண்டும் என்று, எதிர்க்கட்சி வேட்பாளரிடம் விலை பேசி, தொண்டர்களின் உணர்வையும் கட்சியையும் அடமானம் வைத்துள்ளனர்.
பா.ஜ வேட்பாளர் நமச்சிவாயத்திடம் இருந்து, ரூ.50 லட்சமும், காங்.வேட்பாளர் வைத்திலிங்கம் மூலம், ரூ.50 லட்சமும், பெறப்பட்டுள்ளதாக, கட்சியில் மாநில பொறுப்பில் இருக்கும் தலைமை நிர்வாகிகளே, குற்றச்சாட்டை வைக்கின்றனர்.
ஒரு தனிநபர் கட்சியை 'டிபாசிட்' இழக்க வேண்டும் என்பதற்காக கட்சிக்காக உழைக்கக்கூடியவர்களோ, அவர்களை எல்லாம் திட்டம் தீட்டி புறக்கணித்து, அவமரியாதை செய்து அசிங்கப்படுத்துகின்றனர்.
இதனால் அ.தி.மு.க.,விற்கு புதுச்சேரி மாநிலத்தில் ஓட்டு வங்கி குறைந்து, இன்றைக்கு கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படக்கூடிய சூழலில் இருக்கிறது. இரட்டை இலை சின்னம் முடங்கப்போவதாக, கட்சி தொண்டர்கள் மன வேதனையில் உள்ளனர். 50 ஆயிரம் ஓட்டுகளுக்கு குறைவாக வாங்கினால், இரட்டை இலை சின்னம் முடங்கி விடும். இதற்காக திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

