ADDED : மே 14, 2024 05:02 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: காந்தி வீதி வரதராஜ பெருமாள் கோவிலில் 38ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா இன்று துவங்குகிறது.
புதுச்சேரி, காந்தி வீதி வரதராஜ பெருமாள் கோவிலில் 38ம் ஆண்டு பிரமோற்சவ விழா இன்று துவங்குகிறது.
அதனை தொடர்ந்து, நாளை 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நிகழ்ச்சியும், 20ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
தொடர்ந்து, 21ம் தேதி சாமி வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. 24ம் தேதி 108 கலச திருமஞ்சன நிகழ்ச்சியும், 25ம் தேதி தெப்பம் உற்சவமும், 28ம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
