/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வள்ளலார் தர்மசாலை துவக்கிய ஆண்டு விழா
/
வள்ளலார் தர்மசாலை துவக்கிய ஆண்டு விழா
ADDED : மே 25, 2024 03:56 AM

புதுச்சேரி: புதுச்சேரியில், வள்ளலார் தர்மசாலை துவக்க ஆண்டு விழா கொண்டாட்டத்தில், ஏராளமானோர் பங்கேற்றனர்.
முதலியார்பேட்டை, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமான, ராமலிங்க சுவாமி மடத்தில், 158ம் ஆண்டு அணையா அடுப்பு மூட்டி தர்மசாலை துவக்கிய விழா கடந்த, 16ம் தேதி துவங்கியது.
இதையடுத்து கடந்த, 23,ம் தேதி வரை தமிழரசி திருவருட்பா குழுவினரின், திருவருட்பா மற்றும் உரைநடை வாழ்த்துப் படித்தனர்.
இதைத்தொடர்ந்து, நேற்று காலை 6:00 மணிக்கு, புதுச்சேரி தலைமை சங்க நெறியாளர் ஆத்மலிங்கத்தின், அகவல் வாழ்த்து நிகழ்ச்சி நடந்தது.
காலை 8:00 மணிக்கு, சத்திய ஞான கொடி ஏற்றம் நடந்தது. தீபம் ஏற்றி, தர்மசாலை பணியை, முன்னாள் சபாநாயகர் கோதண்டராமன் துவக்கி வைத்தார்.
காலை 9:00 மணிக்கு மணிமாறனின், வீணையில் அருட்பா இசை நிகழ்ச்சி நடந்தது. மேலும் அருள்ஜோதி யோகா மாணவர்கள் தேஜஸ்ரீ, குணேஷ்வரியின் பரதநாட்டியம் நடைபெற்றது.
காலை 10:30 மணிக்கு, முதலியார்பேட்டை, ராமலிங்க சுவாமி கோவில் மடத்தின் அமைப்பு செயலாளர் ராமகிருஷ்ணன், பேராசிரியர் குழந்தை வேலனார், வேல்முருகனார், சன்மார்க்க கூட்டமைப்பு தலைவர் கணேசன், ஆகியோரின் சொற்பொழிவு நடந்தது.
நிறைவாக, துணை பொதுச்செயலாளர் சீத்தாலட்சுமி நன்றி கூறினார். மதியம் 1:00 மணிக்கு, அன்னதானம் நடந்தது.
இதில், பொறுப்புத்தலைவர் ஜெகநாதன், நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், சன்மார்க்க மகளிர் குழு தலைவி சஜிதா, சன்மார்க்க சபையின் தலைவர் சரவணன், செயலாளர் செல்வநாதன், பூசகர் தேவநாதன், விழா குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

