/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஐயப்பன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., கோரிக்கை

ADDED : ஆக 13, 2024 05:02 AM
புதுச்சேரி: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஐயப்பன் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பேசினார்.
ஜீரோ நேரத்தில் அவர் பேசியதாவது.
ஜீவானந்தபுரம் வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட ஐயப்பனுடைய உடல் இரண்டு நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. கூலி தொழிலாளியான ஐயப்பனுக்கு இரண்டு மகள்கள். அவரை நம்பித்தான் அந்த குடும்பம் இருந்தது. இப்போது அவர்களுடைய குடும்பத்தின் நிலை கேள்வி குறியாக இருக்கிறது.
முதல்வர் கருணை உள்ளத்தோடு அந்த குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரண நிதியாக வழங்க வேண்டும். புதுச்சேரி அரசிடம் இது போன்ற ஒரு அசம்பாவிதம் நடக்கின்ற போது போர்க்கால அடிப்படையில் அவர்களை மீட்க எந்த ஒரு கருவியும் இல்லை. தீயணைப்பு துறை கம்பிகளை கொண்டு தேடினாலும் கிடைக்கவில்லை. பொதுப்பணித்துறையில் சேர்ந்து தேடினார்கள். ஆனால் உடலை மீட்க முடியவில்லை.
வயநாடு போன்று சம்பவங்கள் நம்மூரில் நடைபெறாது. இருந்தாலும் இதுபோன்ற பேரிடர் சூழ்நிலையில் மீட்க, அதற்கான கருவிகள் புதுச்சேரி அரசிடம் இல்லை. பெரிய வாய்க்கால்களை ஆறு மாதத்திற்கு ஒருமுறை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.