தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தடுப்பூசி செலுத்தினால் ரூ. 10 ஆயிரம் நிதி உதவி

தடுப்பூசி செலுத்தினால் ரூ. 10 ஆயிரம் நிதி உதவி

தடுப்பூசி செலுத்தினால் ரூ. 10 ஆயிரம் நிதி உதவி


ADDED : ஆக 02, 2024 11:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2024 11:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் மருத்துவ செலவினை புதுச்சேரி மருத்துவ நிவாரண சங்கத்தின் மூலம் திருப்பி அளிக்கப்படும். காமராஜர் நுாற்றாண்டு கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் குடிசை வீடுகளை கல்வீடுகளாக மாற்ற நிதி உதவி அளிக்கப்படும்.

ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோவில்களை புனரமைக்க ரூ. 10 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும். புதுச்சேரி காரைக்காலில் நலிவடைந்த கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்த ரூ. 15 கோடி வழங்கப்படும்.

குழந்தைகளுக்கு 100 சதவீத தடுப்பூசி செலுத்தி கொள்வதை உறுதி செய்யும் பொருட்டு, 1 வருட தடுப்பூசி அட்டவணை படி அனைத்து தடுப்பூசி செலுத்தி கொள்ளும் புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட பெற்றோரின் குழந்தைகளுக்கு ரூ. 10 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us