தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கஞ்சா விற்ற இரு வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற இரு வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற இரு வாலிபர்கள் கைது


ADDED : மார் 26, 2024 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2024 04:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மதகடிப்பட்டு தனியார் கல்லுாரி அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

மதகடிப்பட்டு தனியார் கல்லுாரி அருகே கஞ்சா விற்பதாக திருபுவனை போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் அந்த பகுதி யில் சோதனை செய்தனர்.

அங்கு சந்தேகப்படும்படி நின்ற இரண்டு வாலி பர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், இருவரும் கஞ்சா வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

மேலும் விசாரணை செய்ததில், அவர்கள், விழுப்புரம் மாவட்டம் வளவனுார் பகுதியை சேர்ந்த மாதேஷ், 23; கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த சதிஷ், 25; என தெரியவந்தது. அவர்களிடமிருந்து, ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள 110 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us