ADDED : மார் 31, 2024 04:44 AM

நெட்டப்பாக்கம், : ஏரிப்பாக்கம் பகுதியில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் நேற்று முன்தினம் மாலை இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பதாக நெட்டப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று சந்தேகம்படும்படி நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.
அதில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் 25, ஏரிப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெரு முகிலன் 25, என, தெரியவந்தது.
அவர்களிடம் சோதனை நடத்தியதில், 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள், 1,200 ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பான்மசாலா, ஹான்ஸ், பீடி உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், கஞ்சா பொட்டலங்கள், குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

