/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காப்புக்காட்டில் மர்ம தீ விருதை அருகே பரபரப்பு
/
காப்புக்காட்டில் மர்ம தீ விருதை அருகே பரபரப்பு
ADDED : ஏப் 02, 2024 03:56 AM
விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே காப்புக்காடு மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் - கருவேப்பிலங்குறிச்சி சாலையில், கருவேப்பிலங்குறிச்சி காப்புகாடு உள்ளது. இதில், மான், மயில், நரி, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில், அந்த காப்புக்காட்டில் நேற்று இரவு 8:00 மணியளவில் தீடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து சென்ற வனத்துறை அலுவலர் ரகுவரன் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் மற்றும் விருத்தாசலம் தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர்.
இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

