/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்தல் கெடுபிடி ஓய்ந்த நிலையில் 'களை' கட்டிய சண்டே மார்க்கெட்
/
தேர்தல் கெடுபிடி ஓய்ந்த நிலையில் 'களை' கட்டிய சண்டே மார்க்கெட்
தேர்தல் கெடுபிடி ஓய்ந்த நிலையில் 'களை' கட்டிய சண்டே மார்க்கெட்
தேர்தல் கெடுபிடி ஓய்ந்த நிலையில் 'களை' கட்டிய சண்டே மார்க்கெட்
ADDED : ஏப் 22, 2024 05:17 AM

புதுச்சேரி: தேர்தல் கெடுபிடி ஓய்ந்த நிலையில் மீண்டும் சண்டே மார்க்கெட் நேற்று களை கட்டியது.
புதுச்சேரிக்கு இருக்கும் அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது, ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும் சண்டே மார்க்கெட். இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை. அனைத்து பொருட்கள் கிடைக்கும். விலையும் மலிவாக இருக்கும்.
இரண்டு கிலோ மீட்டர் துாரம் வரை இந்த சந்தை செயல்படுகிறது. காலை 9:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை நடக்கும் இந்த சந்தையில் 1 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் நடக்கும். ஞாயிற்றுகிழமைதோறும் களை கட்டும் சண்டே மார்க்கெட் வியாபாரம் தேர்தல் கெடுபிடிகளால் களை இழந்தது. வியாபாரமும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எப்போது சண்டே மார்க்கெட்டில் பர்சேஸ் பண்ணாமல் வீடு திரும்புவதில்லை. அந்த அளவிற்கு உள்ளூர்க்காரர்கள் மட்டுமின்றி வெளியூர்க்காரர்களையும் கவர்ந்தது சண்டே மார்க்கெட். ஆனால் தேர்தல் காரணமாக சுற்றுலா பயணிகளும் வருகையும் குறைவாக இருந்ததால் வியாபாரம் டல் அடித்து.
ஓட்டுப்பதிவு கடந்த 19ம் தேதி முடிந்த நிலையில், தேர்தல் கெடுபிடிகளும் சற்று தளர்ந்துள்ளது. இதனையடுத்து நேற்று வழக்கம்போல் சண்டே மார்க்கெட் வியாபாரம் களை கட்டியது. திருவிழா போல் சண்டே மார்க்கெட்டில் கூட்டம் நிரம்பி வழிந்தது. வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

