/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு
/
நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு
நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு
நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு
ADDED : மே 21, 2024 05:10 AM
புதுச்சேரி: நீட் மதிப்பெண் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி வரை காலக்கெடுவை சென்டாக் நீட்டித்துள்ளது.
நீட் அல்லாத தொழில் படிப்புகளில் 5,264 இடங்கள், கலை அறிவியல் கல்லுாரிகளில் 4,320, நுண்கலை படிப்புகளில் 75, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காமராஜர் அரசு பொறியியல் கல்லுாரி, மகளிர் அரசு பொறியியல் கல்லுாரிகளில் உள்ள பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்பில் 334 இடங்கள் என மொத்தம் 9,993 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு www.centacpuducherry.in என்ற சென்டாக் இணையதளத்தில் கடந்த 8 ம்தேதி ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றது.விண்ணப்பிக்க நாளை 22ம் தேதி வரை காலக்கெடு அளிக்கப்பட்டு இருந்தது.
மாணவர்கள்,பெற்றோர்களின் கோரிக்கை ஏற்று தற்போது இம்மாதம் 31ம் தேதி ஆன் லைனில் விண்ணப்பம் சமர்பிக்கலாம் என சென்டாக் அறிவித்துள்ளது.
என்ன படிப்புகள்
பி.டெக்., பி.ஆர்க். பி.எஸ்சி., விவசாயம், தோட்டக்கலை, கால்நடை மருத்துவம் (பி.வி.எஸ்.சி மற்றும் ஏ.எச்) படிப்புகளுக்கும், பி.எஸ்சி., நர்சிங், பிசியோதெரேபி, பி.எஸ்சி., பாரா மெடிக்கல் படிப்புகள், பி.பார்ம் (பார்மஸி), 5 வருட சட்ட படிப்பான பி.ஏ. எல்.எல்.பி., புதுச்சேரி பிராந்திய கல்லுாரிகளில் உள்ள பாரா மெடிக்கல் படிப்புகளில் டிப்ளமோ, புதுச்சேரியில் உள்ள 6 அரசு மற்றும் அரசு உதவி பெறும் சொசைட்டி கல்லுாரிகளில் உள்ள படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்
எஸ்.சி.,எஸ்.டி., மாற்று திறனாளி பிரிவு மாணவர்கள் நீட் மதிப்பெண் அல்லாத டிகிரி,டிப்ளமோ படிப்புக்களில் சேர 500 ரூபாய்,கலை அறிவியல் வணிக படிப்பில் சேர 150 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
இதர பிரிவு மாணவர்கள் நீட் அல்லாத டிகிரி,டிப்ளமோ தொழில் படிப்பில் சேர 1000 ரூபாய்,கலை அறிவியல் படிப்பில் சேர 300 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.பிற மாநில மாணவர்கள் நீட் அல்லாத டிகிரி,டிப்ளமோபடிப்பில் விண்ணப்பிக்க 1500 ரூபாய்,கலை அறிவியல், வணிக படிப்பில் விண்ணப்பிக்க 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

