/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்தல் துறை அனுமதி இல்லாததால் விழா ரத்து
/
தேர்தல் துறை அனுமதி இல்லாததால் விழா ரத்து
ADDED : மார் 24, 2024 04:28 AM
புதுச்சேரி: தேர்தல் துறையில் அனுமதி பெறாததால், தமிழ்ச்சங்கத்தில் நடக்க இருந்த விழா ரத்து செய்யப்பட்டது.
தேர்தல் அறிவிப்பிற்கு பின்பு, அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றும் நிகழ்ச்சிகளுக்கு தேர்தல் துறையில் அனுமதி பெற வேண்டும்.
ஆனால் புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில், பண்டித் தீன்தயாள் உபத்யாய் கிராமப்புற பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் விருது வழங்கல், நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடத்த உள்ளதாக போலீசாருக்கு தகவல் சென்றது.
விழாவில் அமைச்சர், எம்.எல்.ஏ.கள் பங்கேற்பார்கள் என அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பெரியக்கடை போலீசார் தமிழ்ச்சங்கம் சென்று விசாரித்து, தேர்தல் துறை அனுமதியின்றி விழாக்கள் நடத்த கூடாது என தெரிவித்தனர்.
அப்போது, விழா நடத்த தமிழ்ச்சங்கத்தில் அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விழா ரத்து செய்யப்பட்டு, தமிழ்ச்சங்க வாயில் கதவு பூட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

