ADDED : ஏப் 21, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு ஆதரவாக, பிரசாரம் செய்த நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு, அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம் சக்தி நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
வலிமையான இந்தியா உருவாக தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து, தே.ஜ., கூட்டணியின் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு, 'தாமரை' சின்னத்தில் பிரசாரம் செய்து, அயராது தேர்தல் பணி மேற்கொண்ட மாநில அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில கழக நிர்வாகிகள், தொகுதி செயலாளர்கள், பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள், காரைக்கால் மாவட்ட நிர்வாகிகள், மாநில பிற அணி நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

